என்னைப் பற்றி நானே( தற்பெருமை அல்ல)

My photo
காதலை மையப் புள்ளியாக கொண்டது இவனது உலகம். யாரேனும் பரிசு தர விரும்பினால் அன்பை மட்டும் தாருங்கள், ஏனென்றால் அன்பிற்கு தேவை இல்லை அழகும், ஆடம்பரமும்.

Monday, 29 August 2011

உலகின் மிகச் சிறந்த காதலி




ஜென்னி மார்க்கஸ். வசதியான குடும்பத்தில் பிறந்து, கார்ல் மார்க்ஸ்யை திருமணம் செய்து எராளமான துயரங்களை சந்தித்தவர். வறுமையின் காரணமாக, அடுத்தடுத்து தான் குழந்தைகளைப் பறிகொடுத்தார். கார்ல் மார்க்ஸ்சின் நடவடிக்கைகளுக்காக belgeium அரசாங்கத்தால் " விபசார வழக்கில்" கைது செயப்பட்டார் ஜென்னி . மார்க்ஸ்சின் தோழர்கள் சிறையை முற்றுக்கையிட்டு கோஷம் எழுப்பினர். பிறகு, நீதிமன்றத்தில் ஜென்னி நிறுத்தப்பட்டபொழுது, "ஏன் குழந்தைகளை கைது செய்ய வில்லை " என்று போலீசை கண்டித்தார் நீதிபதி. கார்ல் மார்க்ஸ் பல தடவை நாட்டை விட்டு துரத்தப் பட்ட பொழுது, சொல்லமுடியாத துயரங்களை சந்தித்தார். லண்டனில் அழுத தான் பச்சிளம் குழந்தைக்குப் பால் கொடுக்க முடியாமல் ஜென்னியின் மார்புகளில் ரதம் வழிந்தது. பால் இன்றி இறந்து போன குழந்தையை அடக்கம் செய்யவும் வசதி இல்லை. "குழந்தை பிறந்த பொழுது தொட்டில் வாங்க காசு இல்லை; அவன் இறந்த பொழுது, சவப்பெட்டி வாங்க காசு இல்லை" என்னும் ஜென்னியின் புகழ் பெற்ற கடித வரிகளில் இப்பொழுதும் ரதம் கொட்டும். வரலாற்றிலும், இலக்கியங்களிலும் லைலா, அமர்வது, ஜூலிஎட் என்று ஏராளமான காதலிகள் இருந்தார்கள். அவர்கள் அனைவரும் காதலையும், காதலனையும் மட்டுமே நேசித்தார்கள். ஆனால், ஜென்னி மட்டும்தான் தான் காதலனின் லட்சியங்களையும், அதற்காக கொடுக்கப்பட்ட விலைகளையும் நேசித்தவர். மார்க்ஸ்யை பிரியும்பொழுது வழக்கமாக ஜென்னி சொல்லும் வார்த்தைகள் இவை....

                                      " நீ என்னருகில் இல்லை என்ற உணர்வில்
                                        நான் என்னிடம் இல்லை என்பதை
                                        உணரக்குட முடிவது இல்லை!" நன்றி ஆனந்த விகடன் 


Friday, 26 August 2011

தமிழ் இலக்கியத்தின் டாப் டென் புதினங்கள்

தமிழ் இலக்கியத்தின் டாப் டென் புதினங்கள் எவை என்ற கேள்விக்கு தனக்கு விருப்பமான பட்டியலை எஸ். ராமகிருஷ்ணன் தந்துள்ளார்.
1) தி. ஜானகிராமன் - மேகமுள்
2) ஜெயகாந்தன் - ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்
3)கி-ராஜநாராயணன் - கோபல்ல கிராமம்
4) ப. சிங்காரம் - புயலிலே ஒரு தோணி
5) ஜி.நாகராஜன் - நாளை மற்றும் ஒரு நாளே
6) சுந்தர ராமசாமி - ஒரு புளிய மரத்தின் கதை
7) அசோகமித்திரன் - ஒற்றன்
8) கரிச்சான் குஞ்சு - பசித்த மானுடம்
9) வண்ண நிலவன் - கடல் புரத்தில்
10) எஸ்.சம்பத் - இடைவெளி
இந்த பட்டியலில் சாரு நிவேதிதாவின் ஒரு புத்தகம் கூட இல்லை என்பது மிகப் பெரிய வருத்தம்.
சாருவின் ஸீரோ டிகிரி நாவலை கலிஃபோர்னியா ஸ்டேட் யூனிவர்ஸிட்டியில் modern asian classics பிரிவில் சேர்த்து பாடம் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். கோட்டயத்தில் உள்ள மகாத்மா காந்தி பல்கலைக்கழகத்தில் அதே நாவல் முதுநிலைப் பாடத் திட்டத்தில் கற்பிக்கப்பட்டு வருகிறது. உண்மைலேயே, சாரு தமிழ் இலக்கியத்திற்கு கிடைத்த மிகப் பெரிய வரம். சாருவின் படைப்பை விட்டுவிட்டு தமிழகத்தின் டாப் டென் புதினங்கள் இருக்குமென்றால் , உப்பற்ற சமையலைப் போலத்தான் அந்த பட்டியல் இருக்கும்.
 
நன்றி அனந்த விகடன்

Monday, 22 August 2011

உத்திரவாதம்

புறந்தள்ளிய உறவுகளை
மீண்டும் அரவணைக்கையில்
                        கண்களோடு
                        மடிந்து விடக் கூடிய கண்ணிரையோ,
                        மஞ்சள் தடவிய
                        பத்திரிகையையோ,
                        மெலிதான கைகுலுக்கலையோ,
                        சுவாரசியம்மற்ற பரிசுப்பொருளையோ,
                        உடல் நலம் குறித்த
                        விசாரணைகளையோ,
                        வரிகளற்ற குறுஞ்செய்திகளையோ
பரிமாறிக் கொள்கிறோம்.
ஆனால்,
"மீண்டும் புறக்கணிக்கப் போவதில்லை"
என்கிற
உத்திரவாதத்தை
மட்டும்
வேண்டுமென்றே தர மறுக்கிறோம்!!!

Friday, 19 August 2011

சரி என்ற ஒற்றை சொல் மட்டுமே

எனக்குத் தேவை
சரி என்ற
ஒற்றை சொல் மட்டுமே
                அதனால் உன் கனவுகள்
                களவு போகப் போவதில்லை

                உனது ஆசைகள்
               வெறுமையாக்கப்படுவதில்லை

                உனது கைப்பேசியின்
                இரகசியங்கள்
                பகிரங்கப்படுதப்போவதில்லை
எனக்குத் தேவை
சரி என்ற
ஒற்றை சொல் மட்டுமே

அதற்காக
தந்து விட்டுப் போகிறேன்
உனது தலைமுறைக்கும்
தேவையான
ஒட்டு மொத்தக் காதலை!!!!

நட்பு வட்டம்

எதிர் வீட்டில் வசிப்பவர் யாரென்று
வருடங்களில் இன்னமும் தெரியாது
நண்பர்களாகச் சாப்பிடப் போன
இடத்தில்
அவரவர் தேநீருக்கு
அவரவரே காசு தருகிறோம்
எப்பொதும் தென்படுகிற வாட்ச்மேன்
சிநேகமாக சிரித்தால்
காசுக்குதானென்று எண்ணி
அப்படியே பழக்கப்படுத்துகிறோம்
அப்பாவிற்கு ஆனதைப் போல்
ரயிலில் சந்தித்த நண்பரென்று
யாரும் திருமண அழைப்பிதழோடு
வீடிற்கு வந்தது கிடையாது
நித்தம் பார்க்கிற மளிகைக்காரனிடம்
இரண்டு ருபாய் சில்லறை மீதத்தை
நான்கு புளிப்பு மிட்டாய்களோடு
முடித்துக்கொள்கிறோம் கவனமாக
facebook இல் மட்டும் என்னவோ
Hiew hui tang உட்பட
நான்கு நிலுவைகளையும் சேர்த்து
இருநூற்றி எழுபது நண்பர்கள்!!

நன்றி ப.ராமச்சந்திரன் 

World Population Ranking

World Population
ranking as per
current census as
on 2011.
.
.
.
.
.
.
.
1) China
.
.
.
.
2) India
.
.
.
.
.
3)Face Book

Crazy but true;-)

நன்றி ஜான.

Wednesday, 17 August 2011

காதலிக்க மட்டும் செய்!!!!!

"என்னிடம்
என்ன பிடித்திருக்கிறது?"
என்று கேட்கிறாய்
 
        மல்லிகை பூவிற்கு
        மட்டும்
        பாரபட்சம் காட்டும்
        உன் கூந்தலை சொல்லவா?
 
        வெட்கத்தை முகசுழிப்பில்
        முற்றுக்கையிட்டு
        கண்களால்
        பதிலை சொல்லும்
        தந்திரத்தை சொல்லவா?
 
       "என் மீது
        காதலை வைத்து
        நீ
        ஏமாந்து போனால்,
        அதை தாங்கி
        கொள்ளும் பக்குவம்
        எனக்கில்லை"
        என்ற ஒப்புதல் வாக்குமூலத்தை சொல்லவா?
 
        யாரும் தன்னை
        தவறாக பார்த்து விடக் கூடாது
        என்ற படபடப்பில்
        மார்பு கச்சையை
        சரி செய்யும்
        விரல்களின் தோரனையை சொல்லவா?
 
        பொயென்று தெரிந்தும்
        என் கவிதைகளுக்கு
        தரச் சான்றிதழ்
        அளிக்கும் பெருந்தன்மையை சொல்லவா?
 
காரணங்களை தேடாதே
என்னை
காதலிக்க மட்டும் செய்!!!!!

Tuesday, 16 August 2011

மறதி

மறதி
எனது பிறவி குணம்!!!
ஆனால்
         உனது பிம்பமங்களையும்
         உனது காட்சி நிலைகளையும்
         நீ பரிசாய் தந்து விட்டுப்
         போன உனது நினைவுகளையும்
         மறக்க நினைக்கையில் மட்டும்
மறதி
தனது செயல்பாட்டை நிறுத்திவிடுகிறது

Monday, 8 August 2011

உதட்டின் ஈரம்

யாருமற்ற
தனிமையில்
என் உதட்டின்
ஈரத்தை
அவள் கன்னத்தில்
பதியமிட்டேன்...

 வெட்கத்தில்
சிவந்து போனது
அவளது கன்னங்கள்
மட்டுமல்ல...
அவளை சுற்றி
இருந்த தனிமையும் தான்

Thursday, 4 August 2011

இலக்குகள் அற்ற பந்தயம்

உன் மீதான
என் காதல்
இலக்குகள்
அற்ற பந்தயம்
போல!!!!
எனக்கு தேவை
பரிசுகள் அல்ல
இளைப்பாற
உன் தோள்கள்
மட்டுமே