என்னைப் பற்றி நானே( தற்பெருமை அல்ல)

My photo
காதலை மையப் புள்ளியாக கொண்டது இவனது உலகம். யாரேனும் பரிசு தர விரும்பினால் அன்பை மட்டும் தாருங்கள், ஏனென்றால் அன்பிற்கு தேவை இல்லை அழகும், ஆடம்பரமும்.

Thursday, 10 March 2011

ரசனையின் கசிவு

நிலா
உனக்கு
என்னை
பிடிக்க வேண்டும்
என்பதற்காக
இவ்வுலகை
இருலாக்கவும்
தயங்க மாட்டேன்
இப்படிக்கு
நிலா
****************************
சிலிர்ப்பு
அது என்ன
உனக்கு
மட்டும்
இவ்வளவு மரியாதை????
உன்னை
கண்டதும்
என் ரோமங்கள்
அனைத்தும்
எழுந்து
நிற்கிறதே!!!!!!!
*************************
பொறமை
உன்
பாதத்தை
தொட்ட காரணத்தால்
மணலை
கொன்றது
கடல் அலை
****************************

Tuesday, 8 March 2011

புத்தக வாசிப்பு

புத்தக வாசிப்பு என்பது ஒருவனை சிறந்த சிந்தனையலானாக மாற்றும் என்பதில் எந்த மாற்று கருத்தும் இல்லை. ஆனால் இன்று புத்தக வாசிப்பு என்பதை அறிவார்ந்த தேடலாக யாரும் நினைப்பதில்லை. மாற்றாக அதன் மூலம் பணம் சம்பாதிக்க முடியுமா என்று தேடுகிறார்கள். ஏனோ நமது வாசிப்பின் தரம் சமுகத்தில் கீழ் மட்டத்திற்கு சென்று விட்டது. பத்து வருடங்களுக்கு முன்பு பயணத்தின் பொது நமது கைகளில் இடம் பெற்றிருந்த புத்தகம் இன்று கைப்பேசிகளாக மாறி விட்டது. 
இன்றிய தேதியில் புத்தக காட்சிகளில் அதிகம் விற்பனை ஆவது சமையல் குறிப்பும், தன்னம்பிக்கை புத்தகங்கள் மட்டுமே. ஒரு முறை புத்தக காட்சியில் கல்லா பெட்டியில் அமர்திருந்த ஒருவரிடம், " ஐயா சாரு நிவேதிதா, பாமரன், அழகிய பெரியவன், அசோகமித்திரன் புத்தகங்கள் இருக்கிறதா?" என்று கேட்டேன். ஏதோ வேற்று கிரக வாசியய் போல் என்னை பார்த்து விட்டு, மீண்டும் தன வேலையை செய்ய தொடங்கி விட்டார். (அப்படி என்ன சாமி நான் தப்பா கேட்டுட்டேன்).

வாசிப்பின் தரம் குறைத்ததற்கு யார் காரணம்?...... கற்பனையல்லாத அடிப்படை கல்வி, ரசனை இல்லாத குடும்பம், எதையும் நுனிப்புல் மேயும் புத்தி இதுவே வாசிபிர்க்கான பெரிய தடை. சிறு வயது முதலே அனைவருக்கும் வாசிப்பின் முக்கியத்துவத்தை உணர வைக்க வேண்டும். அப்பொழுதுதான் நமது அடுத்த தலை முறையின் வாழ்க்கை தரம் நன்றாக இருக்கும். 

Monday, 7 March 2011

உன் உதடு

எனக்கு
எப்பொழுதும் தெரியும்  
ஒரே ஒரு 
நிறத்தை 
மட்டும் காட்டும்
வானவில் 
"உன் உதடு"

தமிழீழ தேசிய தலைவரின் தாய் பார்வதி அம்மாள் காலமானார்.

தமிழர்களை கொன்ற சோனியா காந்தியை , விமான நிலையத்திற்கே சென்று வரவேற்ற கருணாநிதி அரசுதான் , படுக்கையோடு படுக்கையாக மருத்துவம் வேண்டி சென்னை வந்த பார்வதி அம்மையாரை , விமான நிலையத்தை விட்டு வெளியே வர சம்மதிக்காமல் விரட்டி அடித்தது என்பதை ரோசஹம் உள்ள தமிழன் நினைவில் கொள்ள வேண்டும்.

ஏன் கருணாநிதி ஐயா எங்களை திருப்பி அனுப்பி விட்டார் ? - பார்வதி அம்மாள் நினைவு இருக்கையில் பேசிய வார்த்தைகள் இது. 


நீ இல்லாத உலகம்

நீ 
இல்லாத
உலகம்
தாயை இழந்த
குழந்தையை 
போன்று
சூன்யமானது !!!!!

Thursday, 3 March 2011

புகை பிடிப்பது உடல் நலத்திற்கு கேடு


புகை பிடிப்பதால் என்னன்ன விளைவுகள் ஏற்படும் என்பதை படம்போட்டுகாட்டியும் நம்மவர்கள் கேட்க மாட்டர்கள். அரசாங்கம் சிகரட்டிற்குசெய்யும்விளம்பரமாக எடுத்து கொள்வார்கள். புகை பிடிப்பதால்

@
 கண் பார்வையை நிகோடின் கடுமையாக பாதிக்கும்.
@
 நுரையீரல் பாதிக்கப்படும்
@
புற்றுநோய் ஏற்பட அதிக வாய்புள்ளது

இது புகை பிடிபவர்க்கு , சரி அருகில் இருப்பவர்க்கு

@
கண் பார்வை இழக்கும் அபாயம்.
@
 தோல் புற்றுநோய்
@
 ஆஸ்துமா
இதை கேட்கும் பொது ஒரு கவிதை ஞாபகம் வருகிறது,
நீ
சாப்பிடும்
சாப்பாட்டில்
நான்
எச்சில்
துப்பி னேனா?
இல்லையே?
பிறகு ஏன்
நீ மட்டும்
நான் சுவாசிக்கும்
காற்றில்
அசுத்தத்தை கலகிறாய்?

------ புகைத்தல் உங்கள் உடல் நலத்திருக்குமட்டும்
திங்கானது அல்ல

அம்மா


கோடிக்கணக்கானோர்
மத்தியில்
என்னை மட்டும்
தன் கருவறைக்குள்
அனுமதித்த
தேவதை..!!!!!

முதலிரவு


உதிர்ந்து கிடந்த
மல்லிகையும்
கசங்கி கிடந்த
போர்வையும்
ரகசியமாய்
பேசுகிறது
முதலிரவின் ரகசியங்களை ............

Wednesday, 2 March 2011

இரவு

உன்னிடம்
பேசிய பொழுது 
குறுகிய 
எனது இரவுகள்,
நீ
பிரிந்து 
சென்றப்பின் 
ஏனோ 
நீளமாகிப்போனது!!!!

Tuesday, 1 March 2011

அநாதை

யாரோ 
சிந்திய ஆண் மழையை 
பிழையரியாது 
பெற்று
எச்சிலாக 
உமிழ்ந்து விட்டாள்
உலகத்தில்!!!!

இருவர் செய்த 
தவறுக்கு
ஒருவனாய்
தண்டனை 
அனுபவிக்கும் 
மகாத்மா நான்!!!

உலகமோ என்னை 
அநாதை
என்கிறது!!!!

பொய்கள்


என்
கவிதைகளில்
ஆயிரம் 
பொய்கள் இருப்பதாக 
சொல்கிறாய்!!!

உண்மைதான்,
கவிதையின் 
அழகே 
அந்த பொய்களில்
தானடி 
இருக்கிறது...