நம்மை பார்த்து சிநேகமாய் புன்னகைக்கும் பலரின் பெயர்கள் நமக்கு தெரிவதில்லை; பெயரில் என்ன இருக்கிறது, நட்பு பாரட்ட ஒரு புன்னகை போதுமே!!!!
ரசனை
ரசனையோடு வாழ்வோம் ஒவ்வொரு மணித்துளியும்....... வாழ்க்கையை கொண்டாடுவோம் ரசனையோடு!! இப்படிக்கு, அன்பை மட்டுமே உலகமாக கொண்டாடுபவன் .
என்னைப் பற்றி நானே( தற்பெருமை அல்ல)
- தில்லைகனி
- காதலை மையப் புள்ளியாக கொண்டது இவனது உலகம். யாரேனும் பரிசு தர விரும்பினால் அன்பை மட்டும் தாருங்கள், ஏனென்றால் அன்பிற்கு தேவை இல்லை அழகும், ஆடம்பரமும்.
Saturday, 27 April 2013
வழிப்போக்கன் வார்த்தை 28
காதலியிடம் சொல்லும் பொய்களை மட்டும் குறித்து வைத்து கொள்ளுங்கள். ஏனோ தெரியவில்லை. தெரிந்தோ தெரியாமலோ நாம் சொல்லும் பொய்களை மறக்காமல் நியாபக படுத்தி பேசுகிறாள்.
பின்குறிப்பு : மேற்கண்ட வாக்கியம் சுய அனுபவ கருத்து அல்ல!!!!
பின்குறிப்பு : மேற்கண்ட வாக்கியம் சுய அனுபவ கருத்து அல்ல!!!!
Sunday, 10 March 2013
வழிப்போக்கன் வார்த்தை 27
உலகிலேயே மிக உன்னதமான தொழில் ஆசிரியர் தொழில் தான்...எதிர் கால சன்னதியை வடிவமைப்பதில் ஆசிரியர்களின் பங்கு மிக முக்கியம். ஒரு நாள் முடிவு பெரும்பொழுது மனதிற்கு திருப்தியை அளிப்பதும் ஆசிரியர் தொழில் தான்!!!!!
ஆனால் என்ன, இந்த திருப்தியை வைத்துக்கொண்டு natural saloon இல் முடி வெட்ட முடிவதில்லையே !!!!!!
Thursday, 28 February 2013
வழிப் போக்கன் வார்த்தை 26
குழந்தைகள் மட்டும் தான் நம்மிடம் சிரித்து விளையாடும் பொழுதும் சரி, நம்மிடம் அடம் பண்ணும் பொழுதும் சரி, மிக அழகாக தெரிகிறார்கள்.
ரகசியங்கள்
உன்னுடைய
ரகசியங்கள் உன்னுடனே
புதைந்து போகட்டும்!!!
உன்
முகப் புத்தகத்தின் கடவுச்சொல்லோ
மின்னஞ்சல் முகவரியின் கடவுச்சொல்லோ
எனக்கு தேவையில்லை.
ஒருவளை அவை
உன் மீதான
என் காதலை
கட்டுடைத்து உதிர்ந்து
போகச் செய்யக்கூடும்
ஆதலால்
உன்னுடைய
ரகசியங்கள் உன்னுடனே
புதைந்து போகட்டும்!!!
ரகசியங்கள் உன்னுடனே
புதைந்து போகட்டும்!!!
உன்
முகப் புத்தகத்தின் கடவுச்சொல்லோ
மின்னஞ்சல் முகவரியின் கடவுச்சொல்லோ
எனக்கு தேவையில்லை.
ஒருவளை அவை
உன் மீதான
என் காதலை
கட்டுடைத்து உதிர்ந்து
போகச் செய்யக்கூடும்
ஆதலால்
உன்னுடைய
ரகசியங்கள் உன்னுடனே
புதைந்து போகட்டும்!!!
விசேஷ நாள்தான்!!!!
முந்தின இரவின்
களைப்பின் எச்சம்
கண்களில் கிறங்க
எப்பொழுதும்
எழ முடிவதில்லை
9 மணிக்கு...
மதிய உணவின்
அடர்த்திக் குறைய
சிறிது உறங்கி
எழுகையில்
எந்த திரையரங்கம்
எந்த திரைப்படம்
என்பதை
நிச்சியதிருப்பாள் மனைவி.
சிரித்தோ, அழுதோ
சிந்தித்தோ பிரமித்தோ
வெளிவருகையில்
முடிவு செய்திருப்போம்
இரவு உணவிற்கு
எந்த உணவகம் என்று !!!!
மூச்சிரைத்து,
வியர்வை குளித்து,
கெட்டவார்தையோடு,
நுகரப்படும் சம்போகத்தோடு
முடிவுபெறும்
ஞாயற்று கிழமையும்
ஒரு
விசேஷ நாள்தான்!!!!
Sunday, 25 November 2012
போட்ட போட்டி!!!
வெட்கத்தால் சிவந்திருக்கும்
உன் கன்னங்களின்
வண்ணத்திற்கும்,
மருதானியல் சிவந்திருக்கும்
உன் கைகளின்
வண்ணத்திற்கும்
போட்ட போட்டி!!!
யார் என் காதலால் சிவந்திருக்கிறது என்று!!!
Subscribe to:
Comments (Atom)