என்னைப் பற்றி நானே( தற்பெருமை அல்ல)

My photo
காதலை மையப் புள்ளியாக கொண்டது இவனது உலகம். யாரேனும் பரிசு தர விரும்பினால் அன்பை மட்டும் தாருங்கள், ஏனென்றால் அன்பிற்கு தேவை இல்லை அழகும், ஆடம்பரமும்.

Thursday, 28 February 2013

விசேஷ நாள்தான்!!!!

முந்தின இரவின் 
களைப்பின் எச்சம்
கண்களில் கிறங்க 
எப்பொழுதும் 
எழ முடிவதில்லை 
9 மணிக்கு...

மதிய உணவின் 
அடர்த்திக் குறைய 
சிறிது உறங்கி 
எழுகையில் 
எந்த திரையரங்கம் 
எந்த திரைப்படம் 
என்பதை 
நிச்சியதிருப்பாள் மனைவி.

சிரித்தோ, அழுதோ 
சிந்தித்தோ பிரமித்தோ 
வெளிவருகையில்
முடிவு செய்திருப்போம் 
இரவு உணவிற்கு 
எந்த உணவகம் என்று !!!!

மூச்சிரைத்து, 
வியர்வை குளித்து,
கெட்டவார்தையோடு,
நுகரப்படும் சம்போகத்தோடு 
முடிவுபெறும் 
ஞாயற்று கிழமையும் 
ஒரு 
விசேஷ நாள்தான்!!!!

No comments:

Post a Comment