என்னைப் பற்றி நானே( தற்பெருமை அல்ல)

My photo
காதலை மையப் புள்ளியாக கொண்டது இவனது உலகம். யாரேனும் பரிசு தர விரும்பினால் அன்பை மட்டும் தாருங்கள், ஏனென்றால் அன்பிற்கு தேவை இல்லை அழகும், ஆடம்பரமும்.

Tuesday, 9 October 2012

யார் யாரெல்லாம் நமக்கு அறிவுரை வழங்கலாம்?

ஒரு பேருந்து கூட நமக்கு நல்ல அறிவுரை வழங்கலாம். கோயம்புத்தூர் உக்கடம் - சின்னியம்பாளையம் வழித்தடத்தில் இயங்கும் பேருந்து  (நகரப் பேருந்து எண் 39 (TN 38 0923)) முழுக்க ஒரே அறிவுரை வாசகங்கள் தான்.
"மனிதனின் முதல் நண்பன் மரம்
மரத்தின் முதல் எதிரி மனிதன்

எந்த நிலை வந்தாலும்
வந்த நிலை மறவாதே

பதறாதே!! பதறினால் 
சிதறி விடும்! (படிக்கடிற்கு மேல)

இயலாமல் தோற்றார் சிலர்
முயலாமல் தோற்றார் பலர்

படிப்பின் அடையாளம் 
பட்டங்களில் அல்ல 
பழகுவதில் .

அழகான ஆடை சிலரது மனங்களை 
மட்டும் மகிழ வைக்கும்
அயராதே உழைப்போ அனைவரது
நெஞ்சங்களையும் மகிழ வைக்கும்

பொறுமையை கடைபிடி
அது வெற்றியின் புதல் படி

எதுவும் நிரந்தரமல்ல
எல்லாம் சில காலம்"

No comments:

Post a Comment