என்னைப் பற்றி நானே( தற்பெருமை அல்ல)

My photo
காதலை மையப் புள்ளியாக கொண்டது இவனது உலகம். யாரேனும் பரிசு தர விரும்பினால் அன்பை மட்டும் தாருங்கள், ஏனென்றால் அன்பிற்கு தேவை இல்லை அழகும், ஆடம்பரமும்.

Saturday, 22 September 2012

திருநங்கைகள் பிச்சை எடுப்பது பற்றி....?


எல்லா சமூக தளங்களிலும் பிச்சை எடுப்பது ஒரு இழிவான செயலாகத்தான் கருதப் படுகிறது. ஆனால் பிச்சை எடுப்போர் யாரும் அதை விருப்பட்டோ, இல்லை மாற்று செயலாகவோ கருதி செய்வதில்லை. பிச்சை எடுப்பதில் முதல் பாலினத்தையும், இரண்டாம் பாலினத்தையும் ஏற்று கொள்ள முடிந்த நம் சமுகத்தால், மூன்றாம் பாலினமாகிய திருநங்கைகளை ஏற்றுக் கொள்ள மறுக்கிறோம். திருநங்கையாகிய "Living Smile" வித்யா எழுதிய "நான் வித்யா" பதிவு செய்திருந்த சில வரிகள் " பெண்களிலும் ஒடுக்கப் பட்ட பெண்களாக, தலித்துகளிலும் அடிமை படுத்தப்பட்ட தலித்துகளாக, சிறுபான்மையினரிலும் ஆகச் சிறுபான்மையினரான திருநங்கைகள் மட்டும் எவ்வித சமூக அங்கீகாரம் இல்லாமல் வாழ்க்கையை ஓட்ட வேண்டியதாய் இருக்கிறது. வயிறு என்று ஒன்று இல்லது போனால் எந்த திருநங்கையும் இங்கே விபச்சாரம் செய்ய மாட்டாள்; பிச்சை எடுக்க மாட்டாள்." இறுதியாக "சொர்க்கம் வேண்டும் என்று நான் கேட்கவில்லை. நரகம் வேண்டாமே என்று தான் மன்றாடுகிறேன். எனக்காகவும் என்னை போன்ற பிற திருநங்கைகளுக்காகவும். புரிந்து கொள்விர்களா? எனில், நன்றி"
பின் குறிப்பு: தற்போது வித்யா அவர்கள் இயக்குனர் மிஷ்கினிடம் உதவி இயக்குனராக பணியாற்றிக் கொண்டிருக்கிறார்.

No comments:

Post a Comment