என்றோ படித்த எனக்கு பிடித்த கவிதை
தலைப்பு : குரைப்பின் மொழி
வெளியே கூட்டிப் போக
ஒரு குரல்
தனியே விட்டு
ஊர் போய் திரும்பினால்
தவிப்பை
வேறொரு குரல்
பேப்பர் போட
வருபவர்க்கு ஒருவிதம்
கொய்யா மரத்தில்
அணிலும் காக்கையும்
விரட்டி பிடிக்க முடியாக்
கோபத்தில் ஒருவிதம்
மேயும் மாடுகளின்
நடமாட்டத்துக்கு
தொடர் குரைப்பு
மாதமொருமுறை வரும்
சிலிண்டர்க்கு
பயத்தோடு ஒரு குரைப்பு
ஒரேலுத்துக் கூடினாலும்
பால்காரர்க்கும் தபால்காரர்க்கும்
வெவேறு விதம்
பாம்புக்கு வன்குரல்
சிறுநீர் கழிக்கவும்
இனம் பெருக்கம்
வெவ்வேறு தொனிகளில்
குட்டிகளுடன்
விளையாடுகையில்
செல்லமாய் ஒரு குரல்
யாருமற்ற இரவுகளில்
தொலைதூரக்
குரைப்புக்கு
பதில் குரைப்பை
சில நேரம்
எதுவுமில்லா அலுபுட்டும்
பொழுதுகளில்
ஆயாசமாய் ஒருகுரல்
திடுக்கிடும் கனவுகள்
கலைகையில்
குழப்பமாய் ஒரு குரல்
எஜமான்
இறந்து போனால்
தேற்ற முடியாத
உயிரின் துயரம்
சொட்டும் குரலென
நாயின் குரல்
நாற்பது விதம்
என் கவிதைகளுக்குக்
கூட இல்லை
இத்தனை விதம்
@@@நன்றி விகடன்
No comments:
Post a Comment