என்னைப் பற்றி நானே( தற்பெருமை அல்ல)

My photo
காதலை மையப் புள்ளியாக கொண்டது இவனது உலகம். யாரேனும் பரிசு தர விரும்பினால் அன்பை மட்டும் தாருங்கள், ஏனென்றால் அன்பிற்கு தேவை இல்லை அழகும், ஆடம்பரமும்.

Tuesday, 8 May 2012

கோயம்புத்தூர் மக்களுக்கு சமர்ப்பணம்.


கோயம்புத்தூர் மக்களுக்கு சமர்ப்பணம். 
என்னை பொறுத்தவரை, தமிழ் நாட்டில் வாழ தகுதியான நகரம் கோயம்புத்தூர் மட்டுமே. அதற்க்கு பல காரணங்கள் உண்டு, இங்குள்ள மக்களின் மனோபாவம் (பேருந்து நடத்துனர், பெட்டிக்கடைக்காரர், போலீஸ்காரர், ஆட்டோ ஓட்டுனர், வீட்டு வேலை செய்பவர், வங்கி மேலாளர், ஆசிரியர் என அனைவருக்கும் ஒரே மனோபாவம்), சுற்றுசூழல், தண்ணீர், டிராபிக் என அடுக்கி கொண்டே போகலாம்... ஆனால் நேற்று நடந்த நிகழ்வை பார்த்த உடன், கோயம்புத்தூர் பற்றிய பிம்பம், அப்படியே தலைகீழாகி போனது... 
மதுரையை சேர்ந்த நண்பர் ஒருவர், கோயம்புத்தூரில் உள்ள தனியார் வங்கியில் வேலை பார்த்து வருகிறார். திருமணமாகி இரு குழந்தைகள், ஒரு குழந்தைக்குவயது 4, மற்றொரு குழந்தைக்கு 10 மாதம்.. நான் தங்கி இருக்கும் பகுதியில் வாடகை வீடு பார்பதற்காக வந்திருந்தார். நாங்கள் பார்க்க போயிருந்த வீட்டின் உரிமையாளரின் வயது 60 இருக்கும். ஒரே மகன் US இல் Programme Analyst. Single Bedroom flat, வாடகை 6500, முன் பணம் 45000. எங்களை பற்றி எல்லா விபரங்களையும் கேட்டு தெரிந்துகொண்டார் (ஜாதகத்தில் என்ன தோஷம் இருக்கிறது என்பதை மட்டும் தான் கேட்கவில்லை). இறுதியில் எத்தனை குழந்தைகள், குழந்தைகளுக்கு எத்தனை வயதிருக்கும் என்று கேட்டார், பதிலைசொன்ன உடன், உங்களுக்கு வீடு வாடகைக்கு இல்லை என்று சொல்லிவிட்டார்... காரணம் குழந்தைகள். ரொம்ப சத்தம் போடுவார்களாம், சுவற்றில் கிறுக்கி வைத்து விடுவார்களம், குழந்தையின் அழுகை சத்தம் இவர்களின் தூக்கத்தை கெடுத்து விடுமாம். 
நகரங்கள் பெரிதாக பெரிதாக அங்கு வாழும் மனிதர்களின் மனங்கள் சிறிதாகிக் கொண்டே போகிறது. பொருளாதாரத்தை முன்னெடுத்து செல்லும் சமுகத்தில், குற்றங்கள் இயல்பாகலாம். ஆனால் கோயம்புத்தூர் போன்ற நகரத்தில் மனிதாபிமானற்ற தன்மை இயல்பாக கூடாது.
பின்குறிப்பு: "தமிழகத்தில் பூகம்பம் வருவதற்கு அதிக வாய்ப்புள்ள நகரம் கோயம்புத்தூர்" - தமிழக தொல்லியியல் துறை.

No comments:

Post a Comment