நமது நாட்டில் "குடும்ப அமைப்பு" என்பது நொண்டி குதிரையாக மாறி விட்டது, இன்னும் சிறிது நாள் சென்றால் மண் குதிரையாக மாறி விடும். கடந்த வாரம் பேருந்தில் , எனக்கு முன் இருக்கையில் ஒரு தம்பதி அமர்திருந்தர்கள். கிட்டதட்ட ஒரு மணி நேர பயணம், ஒரு வார்த்தை கூட பேசவில்லை. அவர்களிடத்தில் எந்த உணச்சியும் இல்லை. வாழ்கையின் மிச்சத்தை ஒரு கட்டாயத்தின் பேரில் கடத்தி கொண்டு இருக்கிறார்கள். இதனால்தான் பீப் சாண்ட்விச் சாப்பிடும் அமெரிக்கன் மாரடைப்பால் சாவதில்லை, ஆனால் இட்லி, தோசை என்று மிருதுவான சாப்பாட்டை சாப்பிடும் நாம் மாரடைப்பால் சாகிறோம்.
குடும்ப உறவு உண்மையில் எப்படி உள்ளது என்பதைக் கிண்டலடித்து ஓஷோ ஒருமுறை சொன்ன கதை நினைவுக்கு வந்தது.
லட்சியத் தம்பதிகளுக்கு அவர்களது துணிச்சலை சோதித்துப் பார்க்க போட்டி வைத்தார் ஒருவர். மூவர் மட்டுமே அமரக்கூடிய அவரது குட்டி விமானத்தில் ஏறி தைரியமாகப் பயணம் செய்யும் தம்பதிகளுக்கு பத்து லட்சம் பரிசு. ஆனால் ஒரு நிபந்தனை. பறக்கும் நேரத்தில் அந்த இருவரில் ஒருவர்கூட பயத்தில் சின்ன முணுமுணுப்பு செய்தாலும் பரிசு அம்போ.
போதாக்குறைக்கு ஒரு லட்சம் அபராதம் வேறு. மூவர் மட்டுமே அமர வசதி உள்ள விமானத்தில் ஒரே ஒரு சிக்கல். அதற்கு மேல் மூடி கிடையாது. உட்காருபவர்கள் கம்பியை இறுக்கமாகப் பிடித்துக் கொண்டு உட்காரவேண்டும் அவ்வளவுதான். ஒவ்வொரு தம்பதியாக விமானத்தில் ஏறுகிறார்கள். வழியில் பயந்து போய் ‘அய்யோ’ என்றோ ‘அம்மா’ என்றோ கத்தினால் போதும். உடனே விமானம் கீழே இறக்கப்பட்டு விமானி அபராதத் தொகை ஒரு லட்சத்தை வாங்கி பெட்டியில் போட்டுக் கொள்வார்.
கடைசியாக ஒரு தம்பதியினர் ஏறி அமர்கிறார்கள். பறக்கத் தொடங்கி பல நிமிடமாகியும் தைரியமாக அம்ர்ந்திருக்கிறார்கள் அவர்கள் இருவரும். விமானி மலையின் மீது மோதுவது போல் போகிறார்…. சத்தம் போடுவதில்லை இருவரும்.அப்படியே கீழே கொண்டு வருகிறார்…. சத்தம் போடுவதில்லை இருவரும். தலைகீழாக திருப்பி ஓட்டுகிறார்….சத்தம் போடுவதில்லை இருவரும். கடைசியில் விமானியே களைத்துப் போய் வேறு வழியின்றி தரை இறக்குகிறார். ஆச்சர்யம் தாங்காமல் கணவனின் கையைப் பிடித்து “உங்களைப் போல தைரியசாலி தம்பதியைப் பார்த்ததே இல்லை இதுவரை. ஆனால் உங்களிடம் ஒரே ஒரு கேள்வி. உண்மையாகவே நீங்கள் ஒரு முறைகூட பயப்படவில்லையா…” என்று கேட்க…”ஒரே ஒருமுறைதான் பயந்தேன். ஆனால் லட்ச ரூபாய் போய்விடுமே என்ற பதட்டத்தில் கத்தவில்லை அவ்வளவுதான்” என்றார் கணவர்.

“எந்த இடத்தில் கத்த நினைத்தீர்கள்? நான் நேராக அந்த மலைமீது மோதுவது போல் சென்ற போதா….?”
“இல்லை.”
“சரி நான் விமானத்தைத் தரை மீது மோதுவது போல் சென்று திருப்பினேனே அப்போதா…?”
“கிடையாது” என்றார் கணவர்.
“ஆங் இப்போது தெரிந்து விட்டது. நான் தலைகீழாக விமானத்தைத் திருப்பி ஓட்டினேனே அப்போதுதானே….?”
“ஊகூம்.”
“சரி எப்பதான் கூச்சல் போட நினைத்தீர்கள்? அதையாவது சொல்லித் தொலையுங்கள்” என்றார் விமானி ஆத்திரமாக.
“பத்து நிமிடத்துக்கு முன்பு என் மனைவி மேலிருந்து விழுந்தாளே அப்போதுதான்” என்றார் வெகு அமைதியாக.
தோள் தோள் சாய்ந்துகொண்டு போகும் ஐரோப்பியர்கள் அடிக்கடி தங்கள் குடும்பத்தை மாற்றிக் கொள்கிறார்கள். பேருந்தில் பேசாதிருக்கும் இந்தியர்கள் அறுபதுக்கு அறுபது கொண்டாடுகிறார்கள். ஓஷோவின் கதை இந்தியர்களுக்கல்ல
ReplyDeleteகதை இந்தியர்களுக்கா, ஐரோப்பியர்கள்க்கா என்பது முக்கியமில்லை. கருத்து தான் முக்கியம். இங்கே அறுபது ஆண்டுகள் பேசாமல் வாழ்ந்து என்ன சாதிக்க போகிறார்கள். இவர்களிடம் வளரும் அடுத்த தலைமுறையும், இவர்களை போலத்தான் இருக்க போகிறார்கள். காதலற்ற வாழ்க்கை என்பது, பாலைவனத்தில் ரோஜா செடியை நட்டு வைத்து தண்ணீர் ஊற்றுவது போல். காதல் இல்லாமல் ஆயரம் ஆண்டுகள் வாழ இந்தியர்களால் தான் முடியும். தன் மனைவியிடம் I LOVE YOU சொல்லி எத்தனை நாள் ஆகிறது என்று கேட்டு பாருங்கள், அப்பொழுது புரியும், காதலின் வறுமை நம் நாட்டில் தலைவிரித்து ஆடுவதை.......
ReplyDelete