என்னைப் பற்றி நானே( தற்பெருமை அல்ல)

My photo
காதலை மையப் புள்ளியாக கொண்டது இவனது உலகம். யாரேனும் பரிசு தர விரும்பினால் அன்பை மட்டும் தாருங்கள், ஏனென்றால் அன்பிற்கு தேவை இல்லை அழகும், ஆடம்பரமும்.

Saturday, 25 June 2011

உன்னையறியாமல்

உன்னையறியாமல்
            என் நிமிடங்களை
           ஆக்ரமித்துக்
            கொண்டாய்.

            என் கனவுகளை
            திருடிச்
            சென்றாய்.

            எனது நினைவுகளை
            திசை திருப்பினாய்        

உன்னையறியாமல்
            உனது பொருட்களை
            திருடத் தூண்டி
           கள்வனாக்கினாய்.


           கண்ணீரை
           பரிசாய் தந்து
           கோழையாக்கினாய்       

          

          உன் நினைவுகளை

          மட்டுமே என்னுள் பதிவாக்கி
          பைத்தியமாக்கினாய்

மேற்கண்ட எல்லாவற்றிருக்கும்
பொதுவான பதில்
வைத்திருக்கிறாய்
காதல் என்று!!!!!!!

No comments:

Post a Comment