என்னைப் பற்றி நானே( தற்பெருமை அல்ல)

My photo
காதலை மையப் புள்ளியாக கொண்டது இவனது உலகம். யாரேனும் பரிசு தர விரும்பினால் அன்பை மட்டும் தாருங்கள், ஏனென்றால் அன்பிற்கு தேவை இல்லை அழகும், ஆடம்பரமும்.

Tuesday, 17 April 2012

இன்டர்நெட் திருமணங்கள்


இன்று நெட்டில் மேய்ந்து (நெட்டில் மேய்வது என்ற சொல் எந்த மொழியின் உருவாக்கம் என்று தெரியவில்லை) கொண்டிருந்த பொழுது, கமல்ஹாசன் எழுதியதாய் சொல்லப்படும் ஒரு கவிதை படிக்க நேர்ந்தது.....

"முதல் தீண்டலுக்கு உடல் சிலிர்த்து
வெட்கத்தில் புன்னகைத்து
கடற்கரையில் காற்று வாங்கி
கைபிடித்து பரவசமாய் நடந்து
கன்னத்தில் லேசாய் முத்தமிட்டு
கைபேசியில் குறுஞ்செய்தி அனுப்பி
கண்களால் பேசி சிரித்து
கால் கடுக்க காத்திருந்து 
காத்து பிடித்து மெல்ல திருகி
கண்ணீரோடு கட்டியணைத்து
கண்பொத்தி விளையாடி
இடிக்கு பயந்து தோளில் சாய்ந்து
செல்லாமை நெஞ்சில் குத்தி
பேசாமல் இருந்து தவிக்கவிட்டு
கோயில் சுற்றி, குளம் சுற்றி
மாலை ரசித்தி நனைகையில்
துப்பட்டாவில் குடை விரித்து
புத்தகத்தில் கடிதம் மறைத்து
மணிக்கணக்கில் தொலைபேசி
அப்பாவின் அதட்டலுக்கு அஞ்சி
'அவர் ரொம்ப நல்லவர்மா' என
அலுத்து புலம்பி அம்மாவிடம் சொல்லி
ஒருவழியாய் வெற்றி கொள்கிற
காதல் திருமணங்கள் போல
இனிப்பதில்லை
இன்டர்நெட்டில் தேடியலைந்து
பத்துக்குப் பத்து பொருத்தம் பார்த்து
பண்ணுகிற திருமணங்கள்!!!"

உண்மையில் சொல்லப் போனால், இன்று பொரும்பாலும் இளைய தலைமுறையினர் இணையம் மூலம் ஏற்படும் உறவுகளுக்கு அதிகம் முக்கியத்துவம் தருகிறார்கள். அந்த உறவுகள் திருமணத்தில் முடியும் பொழுதுதான் பிரச்சனையே...

No comments:

Post a Comment