சாருவின் Exile நாவலை இரண்டாவது முறையாக படித்துக் கொண்டிருந்த பொழுது (ஏறக்குறைய எல்லாப் பக்கங்களும் அடிக் கோடுகளால் நிரப்பட்டுவிட்டன, என்ன செய்ய பழக்க தோஷம்) கி.ராஜநாராயணன் மற்றும் கழனியூரன் தொகுத்த "வயதுக்கு வந்தவர்களுக்கு மட்டும்" என்ற நூல் படிக்க நேர்ந்தது. 52 நாட்டுப்புற பாலியல் கதைகள் கொண்ட அட்டகாசமான தொகுப்பு. ஒவ்வொரு கதையிலும் அத்தனை பகடி, வித்தியாசமான சொல்வாடை, கருத்து (?) என நவரசமாய் மின்னுகிறது தொகுப்பு.
பசிஉணர்வு, பாலுணர்வு இரண்டும் இயற்கையானவை, இவற்றில் குடும்பம் என்ற அதிகார மையம் நுழைந்த பொழுதுதான் ஒரு சார்புநிலை (Dependency) உருவாகிவிட்டது. இந்த Dependency இயற்கையாக இருக்க வேண்டிய பாலுணர்வை ஒரு Theoretical framework மூலம் ஒழுங்கு படுத்த நினைத்தது. அதனின் பின்விளைவுகள் தான் (Negative Consequences) கற்பழிப்பு, தேனிலவு கொலை, விவாகரத்து போன்றவற்றில் முடிகிறது. இந்த பாலுணர்வை நமது மக்கள் கையாண்ட விதத்தை, கிராமத்து பாணியில் சுவாரசியமாக சொல்லியிருக்கிறார் கி.ரா.
பாலியில் கதைகளை கேட்டு ஒருவன் கெட்டுப்போய் விடுவான் என்பது மிக அபத்தம் . தமிழக தொலைக்காட்சிகளில் காட்டாத வன்முறையை, தமிழக மசாலா பட இயக்குனர்கள் காட்டாத ஆபசத்தை இந்த கதைகள் காட்டுவதில்லை. நமது கலாச்சாரத்தையும், அதன் அழகியலையும் நாட்டுப்புற கதைகளின் மூலமாகவே புரிந்துக்கொள்ள முயல வேண்டும். நாட்டுபுற கதைகள் என்பது முழுக்க முழுக்க கற்பனைகள் அல்ல; சராசரி மனிதனுக்கு ஏற்ப்பட்ட அனுபவத்தோடு (Self Experience) ஒரு சில கற்பனை நிகழ்வை (Fiction) கலந்து தருவதுதான் இந்த கதைகள். ஒரு கோணத்தில் பார்த்தால் நாட்டுப்புற கதைகளும் Auto Fiction category இலக்கியத்தை சேர்ந்ததுதான்.
பி.கு: இதை முகநூலில் டைப் பண்ணிக் கொண்டிருந்த பொழுது, மடிக்கணினி அருகே இருந்த Exile நூலை பார்த்து விட்டு என் நண்பர் ஒருவர் "என்ன புக் சார் இது? பகவத் கீதையா?" என்று கேட்டு விட்டு சென்றார்!!!!!!!!!!

மேற்கண்ட எனது அனுபவத்தை , தான் படித்ததில் பிடித்ததாக சாரு அவர்கள் தனது வலைபதிவில் பதிந்துள்ளார்.
ReplyDeletehttp://charuonline.com/blog/?p=3108
அன்று உண்மையில் வாழ்நாள் சாதனையலாம் விருது பெற்றதை போல உணர்தேன் . நன்றி சாரு