என்னைப் பற்றி நானே( தற்பெருமை அல்ல)

My photo
காதலை மையப் புள்ளியாக கொண்டது இவனது உலகம். யாரேனும் பரிசு தர விரும்பினால் அன்பை மட்டும் தாருங்கள், ஏனென்றால் அன்பிற்கு தேவை இல்லை அழகும், ஆடம்பரமும்.

Tuesday, 26 July 2011

நவீனத்துவம், பின்நவீனத்துவம், யதார்த்தம், மாஜிகல் ரியலிசம்......


நவீனத்துவம் என்பது வாழ்வை விஞ்ஞானபூர்வமாக அணுகி ஆராய்வது. 19 ம் நூற்றாண்டில் தொழில் புரட்சிக்கு பிறகு உருவான சிந்தனை. உதாரணத்துக்கு, முந்தய காலங்களில் கடவுள் கண் முன்னே தோன்றினால், பக்தன் உருகி கடவுளின் காலில் விழுந்து வணங்குவான். அது மரபு பார்வை. அதே கடவுளை, புதுமைப்பித்தன் தனது "கடவுளும் கந்தசாமிப் பிள்ளையும்" சிறுகதையில், காபி வாங்கி கொடுக்க ஹோட்டல்க்கு அழைத்து போவதுடன், உமது லீலைகளை எல்லாம் பில்லுக்கு பணம் கொடுபதற்க்கு காட்டும் என்று பகடி பேசுகிறார். இதுதான் நவீனத்துவம்.

பின்நவீனத்துவம்........20 - ம் நூற்றாண்டின் சிந்தனை தளம். இலக்கியம், சினிமா, இசை, கட்டடக்கலை என எல்லாத்துறைகளிலும் பின்நவீனத்துவம் உண்டு. நாவீனத்துவம் போதவில்லை என்று இந்த கோட்பாடு உருவாக்கப்பட்டது. ஒரு வார்த்தையில் சொல்வதாயின், சிதறடிப்பது என்பதுதான் அதன் ஒரே நோக்கம்.ஒரு கதைக்குள் நான்கைந்து கதைகள் சொல்வது, ஒரே சினிமாவில் வேறுப்பட்ட  நான்கைந்து கதை போக்குகளைச் சரடுகளாக உருவாக்கி, கதையின் மையத்தை சிதறடிப்பது, நகல் உண்மைகளை அடையலாம் காண்பது, பாலியல் சிக்கல்களை நுணுகி ஆய்வது என அதற்க்கு பல தளங்கள் உண்டு. பின்நவீனத்துவம், வாசகனை எழுதாளனக்கு இணைக்கியதுடன் கதையை விருத்தி செய்வதே வாசகனின் வேலை என்கிறது. உதாரணம்: சாரு நிவேதிதாவின் ஸீரோ டிகிரி மற்றும் ராஸா லீலா 

யதார்த்தவாதம்.......18 ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் உருவான கோட்பாடு. அன்றாட வாழ்கையை அதன் உண்மைகளை புலப்படுமாறு எடுத்துச் சொல்வது யதார்த்தவாதம்.மனிதனின் மேம்பாட்டுக்கும், கீழ்நிலைக்கும், அவனது செயல்களே காரணம் என்கிறது யதார்த்தவாதம்....கு.அழகிரிசாமியின் கதைகளைச் சிறந்த உதாரனமாக சொல்லலாம்.

மாஜிகல் ரியாலிசம்..... உள்ளதை உள்ளபடியே காட்டும் மாயக் கண்ணாடி முன்பாக நின்று, அரக்கனின் உயிர் எங்கே இருக்கிறது என்று கேட்க, அது பாதாள லோகத்தில் உள்ள கிளியின் உடலுக்குள் ஒளிந்து இருக்கிறது என்று அடையாளம் காட்டிக் கொடுக்கிற கதையை கேட்கையில், ஏன்....எப்படி என்ற லாஜிக் கேட்க்காமல், அந்த விந்தையில் மயங்கி போயிருந்தோம் இல்லையா? அதுதான் மாஜிகல் ரியாலிசம் !!!!! வாழ்வில் நாம் இழந்து போன விந்தைகளை, மயாயதைக் கதைகளில் மறுபடி உருவாக்குவதே மாஜிகல் ரியாலிசம்!!!

Monday, 25 July 2011

காதல் போதும்


வாழ்கையை 
புரட்டிபோட 
சுனாமி தேவையில்லை, 
பூகம்பம் தேவையில்லை.....
ஒருவலிமையான காதல் போதும்

Friday, 22 July 2011

வண்ணத்துபூச்சிகள்


நீ
பேசியபொழுது
சிதறிய
எச்சில் துளிகள்

காவல்காரன்

உன்னுடைய
ஒவ்வொரு
செய்கையையும்
மெளனமாக
பதிவாக்கிக் கொள்கிறது
என் மனது.....!

மரண வாக்குமூலத்தை
பதிவு செய்யும்
காவல்காரனைப்
போல்......

காரணம்

உலகை
படைத்த கடவுளுக்கு
அதை
எப்படி அழகாக்குவது
என்பது
தெரியவில்லை................

உன்னை படைத்துவிட்டான்...

Sunday, 10 July 2011

காரோட்டியின் முகம்!!!

நன்றாக ஞாபகம் இருக்கிறது
என் தந்தையின்
சடலத்தை
சுமந்து வந்த
காரோட்டியின் முகம்!!!

சடலத்தை
ஏற்றும் பொழுது
விலகிய வேட்டியை
சரி செய்து விட்டதாலா?

இல்லை

சடலத்தை
இறக்கி வைத்தப் பின்
ஆறுதலாக
என் தோளில்
தட்டியதலா ?

காரணம் தெரிவில்லை
ஞாபகம் மட்டும் இருக்கிறது!
மிச்சத்தின் எச்சம் போல......

" CALL BY REFERENCE" & "CALL BY VALUE"

what is " CALL BY REFERENCE" & "CALL BY VALUE"?

"டேய் செகப்பு சட்ட" - This is Call By Reference
"டேய் 420" - This is Cal By Value

நன்றி: கணேஷ்
Wife: I hate the Beggar

Husband: Why?

Wife: Bloody rascal.
I gave him food yesterday &
today he gifted me a book
"How to Cook"!!!

நன்றி: தாமோதரன்

யாரேனும் வழி காட்டுங்கள்

யாரேனும் வழி காட்டுங்கள்
                  அவளது நினைவுகளை
                  கடந்து செல்லும்
                  பாதை
                  எங்கே என்று.......
யாரேனும் கற்று தாருங்கள்
                 அவளது நினைவுகளை
                  மறக்கச் செய்யும்
                  சூத்திரத்தை.......
தினமும்
இறந்து பிறக்கிறேன்
அவளது நினைவு
என்னும்
கருவறையில்!!!!!!

Friday, 8 July 2011

Moral Line

" I agree that
money can't buy
happiness....

But Somehow..
Its's more
comfortable to
sit &cry in a
BMW than a
Bicycle"

நன்றி : சிவா

100% true statement

கேட்கும் கேள்விகளுக்கு
பெண்கள் சரியான
பதில் சொல்வது
பரிட்சையின் விடைத்தாளில்
மட்டுமே
நன்றி: மணி

Confusion

Grammar Says -
" I LOVE YOU " is a Statement not a question....
then
why does it always require Answer?????

நன்றி: திவ்யா

Sunday, 3 July 2011

பிரசவ வேதனை

நான்
ஆணாய் பிறந்த
காரணத்தால், எனக்கு
பிரசவ வேதனை
தெரிய போவதில்லை....
ஆனால்
என் எதிர்பார்ப்புக்களை
நீ பொய்யாக்கும்
ஒவ்வாரு நொடியும்
எனக்கு
பிரசவ வேதனைதான்
என்பதை உனக்கு
எப்படி புரிய
வைப்பேன்.

ஒற்றை தலைமுடி

உன்னோடு
பயணம் செய்கையில்
உன் கூந்தலில்
இருந்த ஒற்றை
தலைமுடி
என் கண்களை
வருடி சென்றது.....
 
காரணம் கேட்டேன்.
 
உன் கண்களை நான்
உற்று பார்த்து
கொண்டிருகின்றேனாம்

Saturday, 2 July 2011

ரகசியம்

என்னிடம் ரகசியங்கள்
ஏதுமில்லை!!!
உன்னை விரும்புகிறேன்
என்பதை தவிர.....