என்னைப் பற்றி நானே( தற்பெருமை அல்ல)

My photo
காதலை மையப் புள்ளியாக கொண்டது இவனது உலகம். யாரேனும் பரிசு தர விரும்பினால் அன்பை மட்டும் தாருங்கள், ஏனென்றால் அன்பிற்கு தேவை இல்லை அழகும், ஆடம்பரமும்.

Tuesday, 21 August 2012

வழிப்போக்கன் வார்த்தை 19


சமாதானத்திற்கான  காரணங்கள் ஆயிரம் இருந்தும், பிரிவதற்க்கான காரணங்களையே தொக்கி நிற்கிறது மனது..!!!!

Sunday, 5 August 2012

வழிபோக்கன் வார்த்தை 18

பேருந்து பயணத்தில், அருகிலிருப்போர் படிக்கும் புத்தகத்தை எட்டிப் பார்க்காமல் இருக்கும் பக்குவம் ஏனோ இன்னும் வரவில்லை.

வழிபோக்கன் வார்த்தை 17

நாம் இறந்தப்பின் யார் யாரல்லாம் அனாதை ஆவார்கள் என்பது தெரியாது. ஆனால் நிச்சியமாய் நமது மின்னஞ்சல் முகவரியும், முகநூல் முகவரியும் அனாதை ஆகிவிடும்.

வழிபோக்கன் வார்த்தை 16

நமது கல்வி முறை, நிறுவனங்களுக்கு தேவையான பொருளாதார அடிமைகளை உருவாக்குகிறதோ தவிர, வாழ்க்கையை முழுமையாக வாழத் தகுதியான நபர்களை உருவாக்கவில்லை.

வழிபோக்கன் வார்த்தை 15

முக நூலில் அதிக நண்பர்களை கொண்டிருப்பவர்கள் நிஜத்தில் தன் அண்டை வீட்டுக்காரனின் பெயரை கூட தெரிந்து கொள்ள விருப்பப்படுவதில்லை### நல்ல தொழில்நுட்ப முன்னேற்றம்.

வழிபோக்கன் வார்த்தை 14

வயதாக வயதாக மற்றவர்களை சந்தேக கண்ணோடு பார்க்கும் புத்தி அதிகரித்தே வருகிறது...

வழிபோக்கன் வார்த்தை 13

நம்மிடையே எந்த தவறும் இல்லாத பொழுது, நம்மை நிராகரித்து செல்லும் நண்பர்களை பார்த்தால் ஒரு பரிதாப உணர்ச்சியே மேலோங்குகிறது.

வழிபோக்கன் வார்த்தை 12

உலகின் மிக மோசமான சித்திரவதை: எதிரிலிருப்பவர் பேசுவது பொய் என்று தெரிந்தும், தெரியாதது போல் கேட்டுக் கொண்டிருப்பதுதான்.

வழிபோக்கன் வார்த்தை 11

படித்ததில் பிடித்தது : அம்மா என்றால் ஓர் அம்மாதான்.... உன் அம்மா என் அம்மா என்று வெவ்வேறு அம்மாக்கள் கிடையாது.!!!

வழிபோக்கன் வார்த்தை 10

காதலிப்பது இன்பம்; காதலிக்கப்படுவது பேரின்பம்; காதல் இல்லாமல் இருப்பது...? ரொம்ப கஷ்டமட சாமீ!!

வழிபோக்கன் வார்த்தை 9

நாம் படித்து செல்வதை தேர்விலும் கேட்பதில்லை, நேர்முக தேர்விலும் கேட்பதில்லை$$$$என்ன உலகமட இது...?

வழிபோக்கன் வார்த்தை 8

நமக்கு பதில் தெரியாத பல கேள்விகளுக்கு புன்னகையை மட்டும் பதிலாய் தந்துவிட்டு தப்பித்து கொள்கிறோம்...####வேறன்ன செய்ய....?

வழிபோக்கன் வார்த்தை 7

மிஸ்டு கால் தந்தவுடன், கால் பண்ணும் கேர்ள் ப்ரெண்டு அமையப் பெற்றவேனே இந்த உலகின் மிகப்பெரிய புண்ணியவான்!!...### அவதானிப்பு

வழிபோக்கன் வார்த்தை 6

பணியிடத்தில் முக நூலை தடை செய்து விட்டு எங்களிடம் என்ன எதிர்பார்கிறர்களோ தெரியவில்லை.... என்ன கொடும சார் இது?

நன்றி சாரு....

April - 7.....இன்றைய நாள் தான் என்னுடைய வாழ்வில் மிக மகிழ்ச்சியான தருணத்தை தந்த நாள்.... கி.ரா வின் “வயதுக்கு வந்தவர்களுக்கு மட்டும்” என்ற நூலை படித்து விட்டு , என்னுடைய கருத்தை சாருவின் வாசகர் வட்டத்தில் பதிவு செய்திருந்தேன். அந்த பதிவை சாரு அவர்கள் தனது வலை பதிவில் "படித்ததில் பிடித்தது" என்ற பகுதியில் வெளியிட்டு இருந்தார்.... என் கண்களாலேயே அதை நம்ப முடிவில்லை.. ஏதோ வாழ்நாள் சாதனையாளன் விருது பெற்ற மகிழ்ச்சியை அனுபவித்தேன்... நன்றி சாரு....

வழிபோக்கன் வார்த்தை 5

மற்றவர்களை பற்றி ஏதோஒரு பிம்பத்தை பத்திரப் படுத்திக்கொண்டே இருக்கிறோம்..பெப்சி மூடிகளை சேகரித்து வைக்கும் நகரத்து சிறார்களை போல்.....

வழிபோக்கன் வார்த்தை 4

ஆண்களை விட பெண்களுக்கு சர்வாதிகார போக்கு ரொம்ப அதிகம்... பின்ன, பழகிய சில நாட்களிலேயே அதிகாரமாய் ஆண்களின் கைப்பேசியை ஆராயும் மனோபாவம் வேறு யாருக்கு வரும்?

வழி போக்கன் வார்த்தை 3

ஒவ்வொரு முறையும் நான் நானாக இருக்க முயன்று, தோற்றுப்போய்.. மற்றவர்களின் அடையாளத்தையே சுமந்து திரிகிறேன்

வழி போக்கன் வார்த்தை 2:

படித்ததில் பிடித்த ஜப்பானிய பழமொழி
"உலகின் முதல் நாகரீகம்
உயரினம்;
உயரினத்தின் முதல் நாகரீகம் 
மனிதன்;
மனிதனின் முதல் நாகரீகம்
பெண்! !!

வழிபோக்கன் வார்த்தை 1

வாழ்க்கைக்கு பணம் முக்கியமா இல்லையா என்பது தெரியவில்லை... ஆனால் பணம் இருந்தால் வாழ்க்கையில் வரும் பல பிரச்சனைகளுக்கு தீர்வு இருக்கும்..

அழகு

அழகாகி கொண்டே 
செல்கிறாள்
என்னவள்...
ஒருவேளை 
என் காதலும்
காரணமாக இருக்கலாம்....

தோழி vs நண்பன்


தோழியிடம் பேசிக்கொண்டிருக்கும் பொழுது நண்பனின் அழைப்பு Waiting இல் இருந்தால், நண்பன் கேட்கும் கேள்வி "மச்சி figure யாருடா?".....நண்பனிடம் பேசிக்கொண்டிருக்கும் பொழுது தோழியின் அழைப்பு Waiting இல் இருந்தால், தோழி கேட்கும் கேள்வி "எந்த பொண்ணு கூட பேசிகிட்டு இருந்த?"
பின்குறிப்பு 1 : பொதுவாக பெண்களின் அனுமானம் தவறாகவே இருக்கும்
பின்குறிப்பு 2 : மேற்கண்டவற்றை படித்துவிட்டு என் தோழி கேட்ட கேள்வி "நீ என்ன தான சொல்ற?", அதற்க்கு நான் "ச்சே சே இல்லடா"... அதற்கு அவள் "பின்ன யாரு?"