சோமு பத்தாவது படிக்கும்போது ஒரு தடவ சும்மா அப்படியே பீச்சுல இருக்கற கண்ணகி சிலை பக்கம் நடந்து போயிட்டு இருந்தான்.. அப்ப கீழ தரைல ஒரு பொண்ணோட போட்டோ இருந்தது.. எடுத்து பாத்தவுடனே அவனுக்கு ரொம்ப பிடிச்சி போச்சு.. அதுக்கப்பறம் அவன் அந்த பொண்ண தேடோ தேடுன்னு தேடிட்டு இருந்தான்.. இப்படியே தேடல் போயிட்டே இருக்கும்போதே ஸ்கூல் முடிச்சி காலேஜும் சேந்துட்டான்.. தன்னோட முயற்சியை கொஞ்சம் கூட விடாம தேடிக்கிட்டே இருந்தான்.. அப்பவும் கிடைக்கல.. ஒரு வழியா படிச்சி முடிச்சி ஒரு வேலைலேயும் சேந்து தேடிக்கிட்டு இருந்தான்.. சுத்தமா கிடைக்கல.. வெறுத்து போய் தன்னோட அப்பா அம்மா பார்த்து வச்ச பொண்ண கல்யாணம் பண்ணி செட்டில் ஆனான்..
ஒரு நாள் சோமு ஆபீசுக்கு போயிருந்தப்ப அவனோட பொண்டாட்டி பிரியா அவனோட பழைய டைரி எல்ல்லாம் ஆரஞ்சு பாத்துட்டு இருந்தா.. அப்ப அந்த போட்டோ அவ கையிக்கு கிடைச்சது .. சோமு ஆபெஸ் முடிச்சி வீட்டுக்கு வந்ததும்..
பிரியா : என்னங்க.. என்ன போட்டோ இது.. ஏன் உங்க டைரில இருக்கு..
சோமு : ஒ.. அதுவான்னு ... மேல விட்டத்த பாத்து தன்னோட பிளாஷ் பேக்க சொல்லி முடிச்சான்..
பிரியா: என்னங்க.. நான் ஒன்பதாவது படிக்கும்போது பீச்சுக்கு போனப்ப இந்த போட்டவ தொலைச்சிட்டேன்.. எப்படி உங்க கைக்கு கிடைச்சதுன்னு தெரியல.. பாத்தீங்களா ஆண்டவோனட திருவிளையடல..

சோமு : என்னடி சொல்ற.. எனக்கு புரியல..
பிரியா : ஆமாங்க இந்த போட்டோவுல இருக்கறது நான்தான்.. என்னைய எப்படி எல்லாம் தேடி இருக்கீங்க.. இனி எத்தனை ஜென்மம் எடுத்தாலும் நான்தான் உங்க பொண்டாட்டி..
இதே கேட்டவுடனே சோமுவுக்கு என்ன சொல்றதுன்னு தெரியல.. அவள கட்டி பிடிச்சி கிட்டத்தட்ட ஒரு ரெண்டாயிரம் முத்தம் குடுத்து அப்படியே வாரி அனைச்சிக்கிட்டான்.. அப்புறம் ரெண்டு பெரும் எல்லார் கிட்டேயும் சொல்லி ரொம்ப சந்தோசப்பட்டுக்கிட்டங்க..
இதன் மூலம் நமக்கு தெரிவது என்னவென்றால்:
“இத முழுசா படிச்ச உங்களுக்கும் வேற வேலை இல்ல எனக்கும் வேற இல்லை.”
பின் குறிப்பு:
ஜென்ம சனி எங்க போனாலும் விடாது
No comments:
Post a Comment