என்னைப் பற்றி நானே( தற்பெருமை அல்ல)

My photo
காதலை மையப் புள்ளியாக கொண்டது இவனது உலகம். யாரேனும் பரிசு தர விரும்பினால் அன்பை மட்டும் தாருங்கள், ஏனென்றால் அன்பிற்கு தேவை இல்லை அழகும், ஆடம்பரமும்.

Friday, 2 December 2011

கழுதை

ஒரு கழுதை மற்றொரு கழுதையிடம்:

என்னை வளர்க்கற ஆள் என்னைப்போட்டு ரொம்ப அடிக்கறாரு.

பின்ன நீ அங்கேர்ந்து தப்பி ஓட வேண்டியதுதானே?

இல்லப்பா, அவருக்கு ஒரு அழகான பெண் இருக்கா. அவளைத் திட்டும்போதெல்லாம் ‘உனக்கு ஒரு கழுதையைக் கல்யாணம் செஞ்சு வைக்கறேன்னு சொல்லிட்டிருக்கார். அந்த ஒரு காரணத்துக்காகத்தான் அடியைச் சகிச்சுகிட்டிருக்கேன்’.

ஜென்ம சனி எங்க போனாலும் விடாது


சோமு பத்தாவது படிக்கும்போது ஒரு தடவ சும்மா அப்படியே பீச்சுல இருக்கற கண்ணகி சிலை பக்கம் நடந்து போயிட்டு இருந்தான்.. அப்ப கீழ தரைல ஒரு பொண்ணோட  போட்டோ இருந்தது.. எடுத்து பாத்தவுடனே அவனுக்கு ரொம்ப பிடிச்சி போச்சு.. அதுக்கப்பறம் அவன் அந்த பொண்ண தேடோ தேடுன்னு தேடிட்டு இருந்தான்.. இப்படியே தேடல் போயிட்டே இருக்கும்போதே ஸ்கூல் முடிச்சி காலேஜும்  சேந்துட்டான்.. தன்னோட முயற்சியை கொஞ்சம் கூட விடாம தேடிக்கிட்டே இருந்தான்.. அப்பவும் கிடைக்கல.. ஒரு வழியா படிச்சி முடிச்சி ஒரு வேலைலேயும் சேந்து தேடிக்கிட்டு இருந்தான்.. சுத்தமா கிடைக்கல.. வெறுத்து போய் தன்னோட அப்பா அம்மா பார்த்து வச்ச பொண்ண கல்யாணம் பண்ணி செட்டில் ஆனான்.. 

ஒரு நாள் சோமு ஆபீசுக்கு போயிருந்தப்ப அவனோட பொண்டாட்டி பிரியா அவனோட பழைய டைரி எல்ல்லாம் ஆரஞ்சு பாத்துட்டு இருந்தா.. அப்ப அந்த போட்டோ அவ கையிக்கு கிடைச்சது .. சோமு ஆபெஸ் முடிச்சி வீட்டுக்கு வந்ததும்.. 

பிரியா  : என்னங்க.. என்ன போட்டோ இது.. ஏன் உங்க டைரில இருக்கு.. 

சோமு : .. அதுவான்னு ... மேல விட்டத்த பாத்து தன்னோட பிளாஷ் பேக்க சொல்லி முடிச்சான்.. 

பிரியா: என்னங்க.. நான் ஒன்பதாவது படிக்கும்போது பீச்சுக்கு போனப்ப இந்த போட்டவ தொலைச்சிட்டேன்.. எப்படி உங்க கைக்கு கிடைச்சதுன்னு தெரியல.. பாத்தீங்களா ஆண்டவோனட திருவிளையடல..
 

சோமு : என்னடி சொல்ற.. எனக்கு புரியல.. 


பிரியா : ஆமாங்க இந்த போட்டோவுல இருக்கறது நான்தான்.. என்னைய எப்படி எல்லாம் தேடி இருக்கீங்க.. இனி எத்தனை ஜென்மம் எடுத்தாலும் நான்தான் உங்க பொண்டாட்டி.. 

இதே கேட்டவுடனே சோமுவுக்கு என்ன சொல்றதுன்னு தெரியல.. அவள கட்டி பிடிச்சி கிட்டத்தட்ட ஒரு ரெண்டாயிரம் முத்தம் குடுத்து அப்படியே வாரி அனைச்சிக்கிட்டான்.. அப்புறம் ரெண்டு பெரும் எல்லார் கிட்டேயும் சொல்லி ரொம்ப சந்தோசப்பட்டுக்கிட்டங்க.. 

இதன் மூலம் நமக்கு தெரிவது என்னவென்றால்:
“இத முழுசா படிச்ச உங்களுக்கும் வேற வேலை இல்ல எனக்கும் வேற இல்லை.”

பின் குறிப்பு:
ஜென்ம சனி எங்க போனாலும் விடாது

டாக்டர்களும் இன்ஜினியர்களும்



டாக்டர்களும் இன்ஜினியர்களும் ஒரு மீட்டிங்குக்கு செல்ல இரயில்வே ஸ்டேஷன் வந்தார்கள்.

கவுண்டருக்கு சென்று டிக்கெட் வாங்கி வந்தபோது டாக்டர்கள் நான்கு பேருக்கும் டிக்கட் வாங்கி இருந்தார்கள். ஆனால் இன்ஜினியர்கள் நான்கு பேருக்கும் சேர்த்து ஒரே ஒரு டிக்கட் மட்டும் வாங்கி இருந்தார்கள்.

டாக்டர்கள் இன்ஜினியர்களிடம், 'ஒரே ஒரு டிக்கட்டுல எப்படி நாலு பேர் ட்ரெயின்ல பயணம் செய்வீங்க.. மாட்டிக்க போறீங்க' என்றார்கள்.

இன்ஜினியர்கள், 'பாத்துகிட்டே இருங்க' என்று சொன்னார்கள்.

டிரெயின் புறப்பட்டதும் டாக்டர்கள் தங்கள் சீட்டில் வந்து உக்காந்தார்கள். இன்ஜினியர்கள் நான்கு பேரும் ஒரே டாயிலட்டுக்குள் புகுந்து கதவை சாத்தி கொண்டார்கள். 

டி.டி.ஆர் வந்து டாயிலட் கதவை தட்டியபோது ஒரே ஒரு கையை மட்டும் வெளியே நீட்டி டிக்கட்டை காண்பித்தார்கள். டி. டி. ஆர் செக் பண்ணி முடித்து சென்றதை பார்த்த டாக்டர்கள் திரும்பி போகும்போது அதே வழி முறையை தாங்களும் கடைபிடிக்கலாம்ன்னு முடிவு செஞ்சாங்க. 

அதனால டாக்டர்கள் நாலு பேருக்கும் ஒரே ஒரு டிக்கட் மட்டும் எடுத்தாங்க. ஆனா இந்த முறை இன்ஜினியர்கள் யாருமே ஒரு டிக்கட் கூட எடுக்கலை. 

டாக்டருங்க, 'எப்படி நீங்க ட்ரெயின்ல வர போறீங்க' என்று கேட்டார்கள். 

இன்ஜினியர்கள், 'பொறுத்திருந்து பாருங்கள்' என்றார்கள். 

டிரெயின் புறப்பட்டதும் இம்முறை டாக்டர்கள் நாலு பேரும் ஒரே டாயிலட்டுக்குள் நுழைந்து கதவை சாத்தி கொண்டார்கள். 
மூன்று இன்ஜினியர்கள் மற்றொரு டாயிலட்டுக்குள் நுழைந்து தாழிட்டு கொள்ள ஒரே ஒரு இன்ஜினியர் மட்டும் வெளியே வந்து டாக்டர்கள் டாயிலட் கதவை தட்டி, 'டிக்கெட்..டிக்கெட்' என்று கத்தினான்.