என்னைப் பற்றி நானே( தற்பெருமை அல்ல)

My photo
காதலை மையப் புள்ளியாக கொண்டது இவனது உலகம். யாரேனும் பரிசு தர விரும்பினால் அன்பை மட்டும் தாருங்கள், ஏனென்றால் அன்பிற்கு தேவை இல்லை அழகும், ஆடம்பரமும்.

Saturday, 23 April 2011

ரசனையின் கசிவு 2


பொறாமை
உன்னை விட்டு
விலகி நடக்கையில் 
சாரலாய் இருந்த 
மழைத்துளி,
உன்னோடு 
கை கோர்த்து
நடக்கையில் 
புயலாக மாறுகிறது!!!!!
வருனபகவானுக்கும் 
உன் மீது காதலோ????
********************************
கண்ணீர்த்துளி 
உன்னை 
மறக்க நினைத்து 
கண்களை 
மூடினேன் 
கண்ணீர் துளியாய்
உனது இருப்பை 
வெளிப்படுத்தி கொண்டுருந்தாய்!!

Friday, 8 April 2011

ரசனையின் கசிவு 1

ஸ்டிக்கர் பொட்டு
உனது
நெற்றியில் மட்டும் 
முத்தம்
கொடுப்பதற்கு 
என் உயிரை
விலையாக கேட்பது
சரியா??
****************************************
ஏளனம் 
உன்னுடன் 
நான் பேசிய 
வார்த்தைகள் 
அனைத்தும் என்னை 
ஏளனமாய் 
பார்க்கிறது!!!!!!
உன்னை அடைந்துவிட்டோம்
என்ற மெத்தனத்தில்.
*****************************************
புன்னகை
என் கவிதைகளிடம்
வசப்பட்டது
உன் புன்னகை
******************************************
சிறை
என் கவிதைகள் 
உன்னை சூழ்ந்துள்ளது!!!!!
அவை
உன்னை சிறை எடுபதர்க்குள்
என்னை
காதலித்துவிடு!!!